Sat. Mar 7th, 2026

மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி | 4.5 சவரன் நகை பறித்த மூவரில் இருவர் கைது தலைமறைவு |

ஜூலை 27-2019

சென்னை அண்ணனூர் ஜோதி நகர் சேர்ந்த காளீஸ்வரி (65). இவர் கடந்த 4 ம் தேதி அன்று வில்லிவாக்கம் தெற்கு செங்குன்றம் சாலை வழியாக முருகன் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவருக்கு எதிரில் நடந்து வந்த 60 வயது முதியவர் காளீஸ்வரியிடம்.. இந்த வழியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், நகைகளை அணிந்து கொண்டு செல்ல வேண்டாம் என்றும் கூறி ஆட்டோவில் ஏற்றி… காளீஸ்வரி அணிந்து இருந்த 4.5 சவரன் நகையை கழற்றிய போது ஆட்டோ ஒட்டுனர் கொடுத்த துணியில் காளீஸ்வரி நகைகளை வைக்கவே ஆட்டோ ஒட்டுனர் நகைகள் அடங்கிய துணி பொட்டலத்தை மடித்து கொடுத்தார். பிறகு காளீஸ்வரியை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு சென்றனர். ஆட்டோவில் இறங்கிய காளீஸ்வரி பொட்டலத்தை பிரித்து பார்க்கும் போது நகை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காளீஸ்வரி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில்.. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டு பிடித்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் நபி (எ) நபீல் (38), திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு சேர்ந்த ஷகில் (எ) சையது கவுஸ் (40) இருவரையும் கைது செய்து இவர்களிடம் இருந்து 8 சவரன் நகை மற்றும் ஒரு ஆட்டோவும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மெபூப் பாஷா (60) என்பவர் தலைமறைவாக உள்ளார். மேலும் இவர்கள் மூவர் மீதும் ஜாம்பஜார், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மெரினா, கொளத்தூர், அயனாவரம், கோயம்பேடு, ஆகிய காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

-நமது நிருபர்