குண்டர் சட்டம் என மிரட்டி | ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ஆய்வாளர் |
ஜூலை 25-2019
புதுக்கோட்டை மாவட்ட நமண சமுத்திரம் அருகே செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். ஐயப்பன் இவரது செங்கல் சூளையில் பணிபுரியும் லாரி டிரைவர் பால்ராஜ். இவர் செங்கல் சூளைக்கு லாரியில் மண்ணை அள்ளிச் சென்று சூளையில் இறக்கி வைத்துக் கொண்டிருந்த போது… அந்த பகுதிக்கு சம்மந்தம் இல்லாத அன்னவாசல் காவல் நிலையத்தின் எல்லைக்கு சம்பந்தமில்லாத எதிர் கரையில் நின்று கொண்டு, அன்னவாசல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் திருட்டு மணல் அள்ள வந்தியா என்று திட்டி உள்ளார்.

மேலும் பால்ராஜ் மற்றும் ராமு ஆகிய இரு டிரைவர்களையும் அடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அன்னவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று… அங்கு வைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியதும் இல்லாமல், உங்களது செங்கல் சூளை உரிமையாளர் ஐயப்பன் என்பவரை ஒரு லட்சம் ரூபாயை எடுத்து வர சொல்லு… பணம் எடுத்து வரும் வரை உங்களை தான் அடிப்பேன் என்று தொடர்ந்து தாக்கி உள்ளார். ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளனர்.


உடனே தகவலறிந்து அவர்களின் உறவினர்கள் வந்து எழுதி தந்துவிட்டு அவர்கள் இருவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் செங்கல் சூளை இருக்குமிடம் நமண சமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்டது. ஆனால் சம்மந்தமே இல்லாமல் அன்னவாசல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஒரு லட்சம் மாமூல் கேட்டு தாக்கி இருப்பதும், ஐயப்பன் இதற்கு முன்பு மணல் அள்ளும் தொழில் செய்தி வந்துள்ளதாகவும், அவர் தற்போது பேரையூர் நாகநாதசுவாமி ஆலயத்தின் குத்தகைதாரகவும் உள்ளதாக தகவல்.
இதற்கு முன்பு அன்னவாசல் ஆய்வாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பலமுறை சிக்கியவர் என்பது தற்போது ஆய்வாளர் செந்தில்குமார் ஒரு லட்சம் ரூபாய் ஐயப்பன் என்பவரை எடுத்து வர வேண்டும் என்றார் என் பாதிக்கப்பட்ட டிரைவர் பால்ராஜ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு வாக்குமூலம் அளித்தார் அந்த வீடியோ ஆதாரத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ச.விமலேஷ்வரன்
