Sat. Mar 7th, 2026

கணவனை கொலை செய்த வழக்கில் | கள்ளக் காதலன் சரண் அடைந்தார் |

ஜூலை 24-2019

தோழியுடன் கணவனை கொலை செய்த வழக்கில்… கள்ளக் காதலன் சரண் அடைந்தார்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ட்ரைவர்

சென்னை, கோயம்பேடு பகுதியில் கள்ளக் காதலை கண்டித்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவரை தனது மனைவி காயத்திரியும் அவரது நண்பரின் மனைவியும் சேர்ந்து கொலை செய்த வழக்கில் காயத்திரியும் பானுவும் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளக் காதலன் மகேந்திரன் மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில்… கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜிவ் தலைமையில் வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை1:30 மணி அளவில் கள்ளக்காதலன் மகேந்திரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சரணடைந்த மகேந்திரன்

பின்பு மகேந்திரனை கைது செய்த கோயம்பேடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்