வாகன சோதனை | சிக்கிய 8 இருசக்கர வாகனம் | இருவர் கைது |
ஜூலை 22-2019
புதுச்சேரி, கோரிமேடு எல்லைகுட்பட்ட பகுதியில் லாரிகள் நிறுத்துமிடம் அருகே.. இன்று காலை கோரிமேடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீதும் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததில்… காவலர்கள் அவர்களை கோரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் புதுச்சேரி வம்பாகீரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) சூர்யா/22 மற்றும் வடலூர் ஆபத்தான புரத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்/22 என்பவர்கள் என்றும்… அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்று தெரியவந்தது.

மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டனர். பிறகு அவர்கள் சிதம்பரம், புதுவை வில்லியனூர், உருளையன்பேட், டி.நகர், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்… ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களில் சூர்யா என்பவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது…
-நிருபர் ராம்
