வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதித்த பெருந்துறை DSP |
ஜூலை 22-2019..,
பெருந்துறை தாலுக்காவில் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறை அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பற்றி கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடைபெற்றது..
பெருந்துறை DSP ராஜ்குமார் கலந்து கொண்டு கூறியதாவது. சிப்காட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிற்கூடங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அம்மாநில போலீசார் நடவடிக்கையில் தப்பி இங்கு வந்து தலைமறைவாக வாழ்ந்து வருவதும், பலரை கண்டு பிடிக்கப்பட்டு பெருந்துறை காவல் துறையினர் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை கைது செய்து அந்த மாநில போலீசாரிடம் ஒப்படைத்து வருவதும், மேலும் இவர்களிடம் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களும் அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் போதை பொருள்கள் அதிகளவில் விற்பனை நடந்து வருகிறதாகவும்.

தவிர, அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு அப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் சிலர் தங்களது வீடுகளிலும் காலி இடங்களிலும் அவர்களுக்கு சிறிய கொட்டகை அமைத்து கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றி முழு விபரங்களையும் அறிந்து கொள்ளாமல் தங்க வைக்க வேண்டாம் என்றும்… இதே போல், பணிபுரியும் இடங்களில் தொழிலாளர்களின் முழு விபரத்தை அறிந்து கொள்ளாமல் பணிக்கு அமர்த்தி கொள்ள வேண்டாம் என்றும், நாளடைவில் சில தொழிலாளர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பும் போது குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்படுகிறதாகவும்.,

பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் இன்றி பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் ஊடுருயிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வாலிபர் ஒருவர் பங்களாதேஷை சேர்ந்தவர் என தெரியவந்தது மேலும் இத்தொழிலாளர்கள் ஆதர்கார்டு போன்ற ஆவணங்கள் சில தரகர்கள் மூலம் பெற்று வேலைக்கு சேர்வதும் தெரியவந்தது. இதனால் அதர்ச்சியடைந்த SP சக்தி கணேஷ் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிளான தொழிற்கூடங்கள், அங்கு பணிபுரியும் ஒப்பந்ததாரர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் தங்களிடம் வேலை கேட்டு வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களை காவல் துறையிடம் அளித்து… காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே அவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் அப்படி பணியாற்றுபவர் கண்டிப்பாக நிறுவனங்களின் அடையாள அட்டையை அவசியம் கழுத்தில் அணிந்து இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வீடுகள் வாடகைக்கு தருபவர்களும் காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே வீடுகள் விடவேண்டும்.மேலும். காவல் துறையின் இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் ஒருவார காலத்திற்குள் தற்பொழுது தங்கியுள்ள வட மாநிலத்தவர் மற்றும் பணிபுரியும் நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் தங்களிடம் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய முழு விபரத்தை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த அறிவிப்பு பெருந்துறையில் வட மாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்யும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் தொழிற்சாலைகளின் மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…
-நிருபர் சண்முகசுந்தரம்
