Sat. Mar 7th, 2026

கஞ்சா போதையில் வாலிபர் ஒருவரை நடுரோட்டில் தாக்கிய ஆசாமிகள்.

ஜூலை 22-2019

சென்னை சைதாப்பேட்டை ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவர் கடந்த 19ஆம் தேதியன்று பாரிமுனை NSC போஸ் சாலைக்கு வேலை நிமிர்த்தமாக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த 2 பேர் ஆட்டோவில் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர். இதுகுறித்து அருகில் இருந்த போக்குவரத்து காவலரிடம் தகவல் தெரிவித்தார்.

போலீசாரிடம் முகமது சுல்தான் தங்களை பற்றி கூறியதை அறிந்த ஆட்டோவில் இருந்த 2 வாலிபர்களும், கஞ்சா போதையில் முகமது சுல்தானை சினிமா பாணியில் சாலையில் ஓட விட்டு துரத்தி சென்று சரமாரியாக தாக்கினர். அதைத்தொடர்ந்து முகமது சுல்தான் கொடுத்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராபர்ட் மற்றும் பூங்கா நகரை பகுதியை சேர்ந்த தீனா ஆகிய இருவரையும் கைது செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்.