Sat. Mar 7th, 2026

12 ஆயிரம் ரூபாயை குப்பையில் இருந்து | மீட்டு தந்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு |

ஜூலை 17-2019

திருவண்ணாமலை சேர்ந்தவர் தேவி (35) இவர் நேற்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இரவு தங்கிவிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை செல்வதற்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வரும்போது கைப்பையில் வைத்திருந்த 12,ஆயிரம் ரூபாய் காணவில்லை என்று கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி என்பவரிடம் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் மல்லிகா என்ற துப்புரவு பணியாளர் குப்பை அள்ளும் போது குப்பைகளுடன் பணம் உள்ள பையையும் தெரியாமல் அகற்றியது தெரியவர உடனே குப்பை கொட்டிய இடத்தில் சென்று தேடும்போதுஅதில் இருந்த 12, ஆயிரம் ரூபாயை தேவியிடம் ஆய்வாளர் மாதேஸ்வரன் ஒப்படைத்தார். தொலைந்து போன பணத்தை அரைமணி நேரத்தில் கண்டு பிடித்து தந்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி என்பவரை காவல்துறையில் உள்ள அனைவரும் பாராட்டினர்கள்…

-நமது நிருபர்