சென்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு | இனி கடத்தப்படாமல் இருக்க வித்யாச முயற்சி |
ஜூலை 17-2019
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பை கருதி இனிவரும் காலங்களில் குழந்தைகள் கைகளில் அவர்களின் விவரங்கள் அடங்கிய பேண்ட் வழங்க உள்ளதாக ரயில்வே டிஎஸ்பி பேட்டி.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவை சேர்ந்த 3 வயது குழந்தையை… மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக போலீசார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் முடிவாக, கடத்தப்பட்ட 3 வயது குழந்தை இன்று திருப்போரூரில் பேருந்து நிலையம் அருகில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே டி.எஸ்.பி. முருகன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர் கூறுகையில் ;
சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தீவிர விசாரணை மேற்கொண்டு அடையாளம் கண்டோம். அதன் பின் குழந்தையை கடத்திச் சென்ற நபரை தனிப்படை அமைத்து தேடுதல் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நபரிடம் இருந்து
குழந்தையை திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மீட்டோம்.

அங்கு குழந்தையை அனாதையாக இருந்தது. குழந்தையை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை மற்றும் தமிழக காவல் துறை கூட்டு முயற்சியால் மட்டுமே குற்றவாளியை மிகக் குறுகிய காலத்திற்குள் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை கடத்தி அனாதையாக விட காரணம் என்ன..? என கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்து வருகிறோம்.
குழந்தையை பறிகொடுத்தவரும், கடத்தியவரும் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பதால் வேறு ஏதாவது காரணம் உள்ளதா.? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி சென்டரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கையில் குழந்தைகளின் தாய், தந்தை விவரங்கள் மற்றும் குழந்தையின் விவரம் அடங்கிய பேண்ட் ஒன்றும் அணிவிக்கப்படும் முயற்சியை மேற்கொள்ள உள்ளோம். அதை வைத்து குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது கடத்தப்பட்டாலும் மிகவும் எளிய முறையில் அவர்களை அடையாளம் காண உதவியாக இருக்கும் என்றும் ரயில்வே டிஎஸ்பி முருகன் தெரிவித்தார்…
-நமது நிருபர்
