தேவாலயத்தில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது | கூட்டாளிகள் தலைமறைவு |
ஜூலை 17-2019
வில்லிவாக்கத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தேவாலயத்தில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது. கூட்டாளிகள் தலைமறைவு.
சென்னை, வில்லிவாக்கம் மன்னடி ஒத்தவாடை தெருவில் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயம் இயங்கி வருகிறது.
கடந்த 18 – 05 – 2019 அன்று இரவு தேவாலய பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள்.. தேவாலய கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் 3 உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்றனர்.
இது குறித்து 19 – 05 – 2019 அன்று தேவாலய நிர்வாகம் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மர்ம கும்பலின் முக்கிய குற்றவாளி சென்னை பெரம்பூரை சேர்ந்த சுமன்(எ) கருக்கா (26) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 10,000 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுமன்(எ) கருக்கா மீது கொளத்தூர் , திருமுல்லைவாயல் , மாம்பலம் , கொரட்டூர் , போன்ற காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருடுவது போன்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. மேலும் தேவாலயத்தில் திருடிய சுமன் கூட்டாளி கும்பலை பிடிக்க வில்லிவாக்கம் போலீசார் திணறி வருகின்றனர்…
-நமது நிருபர்
