மடிக்கணினி கேட்டு | பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள் |
ஜூலை 2-2019
2017-18 ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து… நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்!

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்… கடந்த 2017 – 2018 ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்காததை கண்டித்து அப்பள்ளி முன்னாள் மாணவர்கள்.. நேற்று பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2017-2018 ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே கடந்த ஆண்டு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஒன்றுதிரண்டு பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம்… தங்களுக்கு மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து இச்சம்பவத்தை அறிந்த நகர காவல் துறையினர், மாணவர்களிடம்… பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர், அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நமது நிருபர்
