29-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும், காவல் துறை தலைவராகவும் | ஜே.கே திரிபாதி இன்று பதவி ஏற்றுக்கொண்டார் |
ஜூன் 30-2019
டிஜிபி டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.. அடுத்த டிஜிபியாக கடந்த 29-ஆம் தேதி ஜே.கே திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது…

இந்நிலையில், ஜே.கே திரிபாதி பதவியேற்கும் விழா… சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் (டிஜிபி அலுவலகம்) நடைபெற்றது… இதில் ஓய்வுபெற உள்ள டிஜிபி ராஜேந்திரன் தன் பதவிகளை திரிபாதியிடம் ஒப்படைக்கும் விதமாக கோப்புகளில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து ஜே.கே திரிபாதி தமிழகத்தின் 29-வது டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்றுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் திரிபாதியை கைகுலுக்கி வரவேற்றார்.

இதில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, தமிழக காவல்துறை நிர்வாக கூடுதல் டிஜிபி கந்தசாமி, காவல்துறை நலவாரிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், தலைமைக காவல்துறை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்…

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.கே திரிபாதி தமிழக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்…. பாரம்பரியமிக்க தமிழக காவல் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் மிகவும் பெருமை கொள்வதாகவும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிப்பேன் என்றும் கூறினார்…..
நமது நிருபர்
