கால்வாயில் பிளாஸ்டிக், மாட்டிறைச்சி கழிவு | தொற்றுநோய் பரவும் அபாயம் |
ஜூன் 23-2019
காஞ்சிபுரத்தில் நகரம் முழுவதும் வரும் கழிவுநீர் மஞ்சள்நீர் கால்வாய் வழியாக செல்கிறது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கால் வாய் ஓரத்தில் உள்ள மாட்டிறைச்சி கடைகளின் மாமிச கழிவுகளோடு அடித்து வரப்பட்டு… திருக்காலிமேடு அரசு பள்ளியின் பின்புறம் உள்ள சிறு பாலத்தில் துர்நாற்றத்தோடு தேங்கியுள்ளன.!

இந்த பாலத்தின் வழியே சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். பாலத்தின் கால்வாய் பகுதி முழுவதும் பிளாஸ்டிக், மாமிச கழிவுகளோடு துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்றுக்கள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.!!

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்க ஆட்கள் கால்வாயில் இறங்குகின்றனர். இதனால் கழுத்தளவு கழிவுநீர் உள்ள கால்வாயில் உயிர் பலி நிச்சயம் என்கின்றது. உயிர் பலியுடன் நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்க… சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை சீர் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது…
நமது நிருபர்
