கடந்த 10 ஆம் தேதி பேராண்மை நியூஸ் வெளியிட்ட செய்தியின் எதிரொலி..!!
ஜூன் 12-2019..,
கடந்த 10 ஆம் தேதி பேராண்மை நியூஸ் வெளியிட்ட செய்தியின் எதிரொலி..!! காவல் நிலையக் கட்டிடம் சரிசெய்யப்பட்டது.

சென்னை, அண்ணா நகரில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு முதல் தளத்தில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையமும்… இரண்டாவது தளத்தில் அண்ணாநகர் டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் அடிக்கடி மேற்கூரையின் சிமெண்ட் உடைந்து… அங்கு பணியில் இருக்கும் போலீசார் மற்றும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் தலையின்மேல் விழுவதால் அவர்கள் காயம் அடையும் சூழல் ஏற்பட்டுட்டது.

இந்த செய்தியை கடந்த ஜூன் 10 ஆம் தேதி.. பேராண்மை நியூஸ் வெளியிட்டிருந்தது.. அதைத்தொடர்ந்து இச்செய்தியை கருத்தில் கொண்டு காவல்துறை அக்கட்டிடத்தை சரி செய்திருக்கிறது.

அதற்கு பேராண்மை நியூஸ் சார்பாக… காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்…
