Sun. Mar 8th, 2026

பகலில் காது கேளாதோர் பள்ளி | இரவில் விடுதி |

ஜூன் 11-2019…,

புதுக்கோட்டை, பேருந்து நிலையம்… பூமாலை வணிக வளாகம் அருகில் அரசு காது கேளாதோர் பள்ளி இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் உள்ள வகுப்பறை  பகலில் பள்ளி வகுப்பறையாக பயன்படுத்தியும் , இரவில் மாணவர்கள் அதே வகுப்பறையை விடுதியாக பயன்படுத்தி வரும் அவலநிலை உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது.. இக்கட்டிடம் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம்… புதிய கட்டிடமாக, அரசு சார்பில் தமிழக முதல்வர்  காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த காது கேளாதோர் பள்ளியில் 49 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கட்டிடத்தில் கூடுதல் அறைகள் இல்லாததால் பள்ளியறையை விடுதியாக பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த மாணவ மாணவிகளுக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாது , அதனால் தினமும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் நிர்வாகத்தினர் மனு அளித்தும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. மாணவ மாணவிகள் தங்களது பொருட்களை வைக்கும் ரேக்குகளில் கதவுகள் உடைந்து சேதமடைந்தும் இருக்கிறது. அதையும் சரி செய்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

நமது நிருபர்