அமைந்தகரை பகுதியில் தொடர் செல்போன் பறிப்பு | இன்று இருவர் கைது |
ஜூன் 10-2019..,
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகர் (23). இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 12:30 மணியளவில் அமைந்தகரை, நெல்சன் மணிக்கம் ரோட்டில் நின்று கொண்டு செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கோயம்பேடைச் சேர்ந்த தீபக்குமார் (22), வினோத்குமார் (26) இருவரும் பிரபாகரை தாக்கி விட்டு 20,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு அமைந்தகரை SKYWALK வழியாக வந்தபோது… அங்கு அமைந்தகரை போலீசார் வாகன சோதனை செய்யும் போது செல்போன் பறித்து வந்த தீபக்குமார் , வினோத்குமார் இருவரையும் மடக்கி பிடித்தனர். அதைத்தொடர்ந்து செல்போனை பறிகொடுத்த பிரபாகர் சம்பவ இடத்துக்கு வந்து… சார் இவர்கள் என்னுடைய செல்போன் பறித்து வந்தவர்கள் என அடையாளம் காட்டினார். கைது செய்தவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில்… மேலும் தீபக்குமார் மீது 2018ல் கோயம்பேடு காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்
