Sun. Mar 8th, 2026

வகுப்பறையில் சமையல் செய்யும் பள்ளி நிர்வாகம்.!

ஜூன் 09-2019..,

திருத்தணி அருகே கனகம்மா சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சத்துணவு கூட கட்டிடம் இன்று வரை கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது…

இந்த கட்டிடத்தின் சம்பந்தமாகவும், பள்ளிக்கு குடிநீர் கேட்கும் ஊர் பொதுமக்கள் தலைமை ஆசிரியர் மற்றும் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் சத்துணவு கூடம் இல்லாத காரணத்தால். வகுப்பறையை சமையலறையாக மாற்றி பயன்படுத்தும் அவலமும் இந்த பள்ளியில் நடந்து வருகிறது.

குழந்தைகளின் அருகில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருவதால்.. வரும் நாட்களில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது… அதனால் அப்பகுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க அனுப்ப பயப்படுகிறார்கள். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதியும் இல்லாமல்.. கழிவறைக்கு பயன்படுத்த… போதுமான அளவு தண்ணீர் வசதியும் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுவரையில் இங்கு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்… இந்த தொடக்கபள்ளிக்கு என எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை. தற்போது பணிக்கு வந்துள்ள புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என… மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட வேண்டும்…

நமது நிருபர்..