Sun. Mar 8th, 2026

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் பெண் கைது |

ஜூன் 09-2019…,

நாமக்கல் அருகே பரமத்தி வேலூர் உட்கோட்டம் பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவுருட்டி மற்றும் கந்தம்பாளையம் பகுதிகளில் பகலில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருக்கும் நகைகள் மற்றும் பொருட்களை திருடி போவதாக புகார்கள் அதிகளவில் வருவதால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவ இடங்களின் அருகே உள்ள சிசிடிவி வீடியோ பதிவுகள் மூலம் கரூர் மாவட்டம் வெங்கமேடு NSK நகரை சேர்ந்த ரமணி/29 என்பவர் தான் என உறுதி செய்யப்பட்ட பிறகு அவரை போலீசார் தேடி பிடித்தனர் மேலும் குற்றவாளி திருட்டிற்கு பயன்படுத்திய Hero Duet என்ற இருசக்கர வாகனத்தையும் திருடிய 4.1/2 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

நிருபர் ராம்