ஐ.சி.எப் ஊழியர் மர்ம சாவு | காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள் |
மே, 22-2019…,
ஐ.சி.எப் ஊழியர் மர்ம சாவு. அண்ணாநகர் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்.!

சென்னை, ஐ.சி.எப் கிழக்கு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (34). இவர் ஐ.சி.எப் ரயில்வே ஊழியராக பணிப்புரிந்து வருகிறார். மது பழக்கம் உடையவர் என்பதால் இவருடைய நண்பர்கள் அண்ணாநகரில் உள்ள ஜென்மேட் எனப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக (03-05-2019) அன்று சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்… இன்று காலை 11:00 மணி அளவில் ஊழியர் சிவகுமார் அதிகாரிகளுடனும், சக ஊழியர்களுடன் பேசி நான் நாளை காலை பணியில் சேருவதாக கூறி நல்லப்படியாக இருந்துள்ளார்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் நாளை டிஸ்சார்ஜ் ஆகுவதாக கூறியதை அடுத்து… அவருக்கு ஊசியும், சாக் டிரிட்மென்ட் கொடுத்த நிலையில் அவர் மூச்சு திணறி மயங்கி உள்ளார். உடனே சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆத்திரம் அடைந்த சக அரசு ஊழியர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சுமார் ஐந்து மணி நேரமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் மருத்துவமனை பரப்பரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி… சிவகுமார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அண்ணாநகர் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதால் போலீசார் மீது ஆத்திரம் அடைந்த ஐ.சி.எப் ரயில்வே ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள்… அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சற்று நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது…
நமது நிருபர்
