பெண்னை காதலிக்கச் சொல்லி மிரட்டிய டீ மாஸ்டர் கைது..!
மே, 21-2019…,
அண்ணாநகரில் பெண்னை காதலிக்கச் சொல்லி மிரட்டிய வாலிபரை சரமாரியாக தாக்கி போலீஸிடம் ஒப்படைப்பு.
சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கம்பனியில் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை அண்ணாநகரில் டீ கடையில்.. டீ மாஸ்டராக பணிபுரியும் ஹரிதாஸ். வயது 38. இவரது சொந்த ஊர் கேரளா. இவர் சென்னையில் தங்கி டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இளம்பெண் அண்ணாநகரில் உள்ள ஹரிதாஸ் பணிபுரியும் டீ கடையில் தினமும் டீ சாப்பிடுவது வழக்கம்.

இதே பயன்படுத்தி ஹரிதாஸ் இளம் பெண்ணிடம் நைசாக பேசி பிறகு திருமணம் செய்யச் சொல்லி தொடர்ந்து 15 நாட்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். பயந்து போன இளம் பெண் தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். நேற்று இளம்பெண் அண்ணா நகர் வழியாக வேலைக்கு நடந்து செல்லும்போது பின்னே வந்த ஹரிதாஸ் இளம்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய தொந்தரவு செய்து வந்தார்.
மறைந்திருந்த இளம்பெண் உறவினர்கள் ஹரிதாஸை வழி மடக்கி சரமாரியாக தாக்கி அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளம் பெண்ணிடம் தகராறு செய்த ஹரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்
