வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறி | காரை திருடிய குற்றவாளி கைது |
மே, 21-2019…,
சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை எனும் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மஹாலிங்கம் என்பவர்… தனக்கு கார் வாடகைக்கு வேண்டும் என கூறி இரவு நேரத்தில் லாட்ஜில் தங்கி காலை எழுந்து பார்பதற்குள்… கார் உரிமையாளருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காருடன் தப்பி சென்றதாக புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்ததும். வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் கீதா தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளின் உதவியுடன்… இதே போல ஒரு சம்பவம் மதுரை வாடிபட்டி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் நடந்திருப்பது தெரியவந்தது.

மேற்படி இந்த சம்பவம் குறித்து இரு இடங்களில் கிடைத்தா சிசிடிவி பதிவுகளில் ஒரே நபர் 3 சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வர… சிசிடிவி பதிவில் இடம்பெற்ற நபர் காரைக்குடியில் ஒரு மசாஜ் சென்டர்க்கு சென்று வருவது தெரிய வர அங்கிருந்து கிடைத்த ஒரு செல் நம்பரை கொண்டு தனிப்படையினர்… சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் (37) என்பவரை பிடித்தனர். விசாரணையில் சரவணகுமார் கோவை, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் வாடகைக்கு கார் எடுப்பதாக கூறி உரிமையாளருடன் காரில் ஏறி இரவு ஆனதும்… செல்லும் இடம் காலதாமதம் ஆகும் என்று காரணத்தை கூறி லாட்ஜில் தங்கி உறங்கி செல்லலாம் என கூறிவிட்டு… விடிவதற்குள் காருடன் தப்பித்து விடுவதாக குற்றவாளி குற்றத்தை ஓப்புகொண்டார்.


இவருக்கு துணையாக கூட்டு திருட்டில் பங்கு எடுத்து திருடுவதாக திருச்சியை சேர்ந்த அருண்குமார் (32) என்பவரையும் போலீசார் கைது செய்து… குற்றவாளிகளிடம் இருந்து 3 கார்களை பறிமுதல் செய்தனர்…
நிருபர் ராம்
