மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை | சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் |
மே, 20-2019…,
அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்… இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. பயணிகள் கடும் அவதி சைதாப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட விசாக தோட்டம் தெருவில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இது குறித்து சைதாப்பேட்டை டாடாநகர் உள்ள மின்சாரம் அலுவலத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் சொல்லியும் வராததால் அப்பகுதி பொதுமக்கள் இரண்டு மணி நேரமாக சைதாப்பேட்டை, கோடம்பாக்க ரோடு மற்றும் 8விசாக தோட்டம் சந்திப்பில் சாலை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமரன், நகர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உடனே மின்சாரம் அலுவலகத்தில் இருந்து AD செல்வகுமார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்…
நமது நிருபர்
