Sun. Mar 8th, 2026

தேவாலயம் கதவை உடைத்து உண்டியலில் இருந்த ரூ50 ஆயிரம் பணம் கொள்ளை.

மே, 20-2019…,

வில்லிவாக்கத்தில் தேவாலயம் கதவை உடைத்து அங்கிருந்த உண்டியலில் இருந்த
ரூ50 ஆயிரம் பணம் கொள்ளை.
தேவாலயத்திலுள்ள அனைத்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கப்பட்டன. முகமூடி கொள்ளையர்கள் பட்டா கத்திகளுடன் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம்.

சென்னை வில்லிவாக்கம் ஒத்த வாடை மன்னாடியில் உள்ள…தேவாலயத்தில் இன்று அதிகாலையில் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் கொள்ளையடித்த மர்ம நபர்கள் தேவ ஆலயத்தில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றனர்.

இன்று காலை தேவ ஆலயத்திற்கு வந்த பாஸ்டர் ஜார்ஜ் என்பவர் ஆலயத்தில் உள்ள உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து… பாஸ்டர் ஜார்ஜ் உடனே வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லிவாக்கம் போலீசார்… ஆய்வு செய்துவிட்டு பின்பு வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதே போல் நேற்று முன்தினம் வில்லிவாக்கத்தில் 3 கடைகளை தொடர்ந்து கொள்ளை அடித்து துணி மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஐ.சி.எப். பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 7 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்கள் 97 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறிப்பு. என தொடர்ந்து ஐ.சி.எப். வில்லிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டியுள்ள கடைகளை நோட்டமிட்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் வில்லிவாக்கம் பகுதியில் தினமும் இரவு நேரங்களில் பட்ட கத்திகளுடன் முகமூடி கொள்ளையர்கள் உலாவருகின்றனர் என்று தெரிய வந்தது.

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசாரிடம் பலமுறை புகார் சொல்லியும்… இரவு நேரங்களில் ரோந்து வாகனமுன் வருவதில்லை, போலீசாரும் வருவதில்லை. அதனால் இப்பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர் என்று அப்பகுதி மக்களின் புலம்பல்…

நமது நிருபர்