செயல்படாத சில CCTV கேமராக்கள் | அதனால் அதிகரிக்கும் குற்றங்கள் |
மே, 18-2019..,
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயல்படாத கண்காணிப்புக் கேமராக்களால் அட்டகாசம்.
கேமராக்களை பொருத்த போக்குவரத்து துறையிடம் கெஞ்சும் போலீசார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையமாக செயல்படுவது கோயம்பேடு பஸ் நிலையம். இங்கு தினந்தோறும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து மக்கள்… வேலை, கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
24 மணி நேரமும் பிஸியாக செயல்படக்கூடிய இந்த கோயம்பேடு பஸ் நிலையம்… கடந்த 2008ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

அப்பொழுது பயணிகளின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து துறை சார்பில் இணையத்தில் 65 கேமராக்கள் பொருத்தப்பட்டது. அந்த கேமராக்கள் பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவைகள்… இதுவரை காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
இதனை நன்கு அறிந்து கொண்ட வழிபறி கொள்ளையர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
போலீசார் முதலில் கேட்பது கண்காணிப்பு கேமரா உள்ளதா என்று. தற்போது குற்றங்களை தடுக்கவும் கொள்ளையர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் காரணமாகவே சென்னை போலீஸ் கமிஷனர் மூன்றாவது கண் எனும் கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களில் வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விளக்க முடியாத பல்வேறு வழக்குகளும் துப்பு துலங்கியது. ஆனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் விழுந்திருந்த கவனத்தை திசைதிருப்பி பணம், நகை கொள்ளை அடிப்பவர்கள்… அங்கு உள்ள பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை போலீஸ் என்று கூறி கொள்ளை அடிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் வாரத்திற்கு குறைந்தது நான்கு என நடந்து வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்… இதுவரை ஒரு குற்றவாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகுந்த வருத்தமான விஷயமாக உள்ளது.
காரணம் இந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது தான் என்று கூறப்படுகிறது.
இதனை நன்கு அறிந்து கொண்டு தான்… வழிபறி கொள்ளையர்கள் அடிக்கடி கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களின் கைவரிசையை காட்டி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் குறைந்த எண்ணிக்கை கொண்ட போலீசார் இருப்பதால்… குற்ற சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் போக்குவரத்து துறையிடம் கூறி செயல்படாத இந்த கேமராக்களை செயல்படவைக்கும் முயற்சியிலும்… கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைக்குமாறும் கேட்கின்றனர். ஆனால் போக்குவரத்து துறை இதை சற்றும் காதில் வாங்கி கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட… நகைகளை கொண்டு வந்த நகை வியாபாரி இடம் 25 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தவிர நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி திருட்டுப் போகின்றது. ஆனால் ஒரு சில புகார்கள் மட்டுமே போலீசார் பதிவு செய்கின்றனர். புகார்களை செய்யாமலும் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் விரும்புகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு போலீசார் தங்கள் பகுதியில் குற்றச்சம்பவங்கள் குறைவாக நடப்பதாகவே கணக்கு காட்டி வருகின்றனர். எனவே மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது…
நமது நிருபர்
