வழக்கை முடிக்க ஒருவருட காலம் சென்று | குற்றவாளி கைதா..? |
மே, 17-2019…,
ஒருவருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த வாலிபர் கைது. குற்றவாளியிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல். அரும்பாக்கம் கீரின் வேலி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இருதயராஜ்(60). இவர் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார். இவர் கடந்த ஆண்டு 31- 5 – 2018 ம் தேதி தன் குடும்பத்தோடு ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது.. வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இது குறித்து இருதயராஜ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். நேற்று இரவு அமைந்தகரை மெத்தா நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது… அந்த வழியாக வந்த இரு வாலிபர்கள் போலீசை பார்த்ததும் ஒட ஆரம்பித்தார். விரட்டி சென்று அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் டிபி.சத்திரம் பகுதியை சேர்ந்த ரகு (எ) ரகுவரன்(21), இவருடைய கூட்டாளி ராஜேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு இருதயராஜ் வீட்டில் 25 சவரன் நகையை திருடி சென்றது தெரிய வர… உடனே அரும்பாக்கம் போலீசார் இடம் இருவரை ஒப்படைத்தனர். கைது செய்த அரும்பாக்கம் போலீசார் ரகு என்பவரிடம் இருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி.. ரகுவை சிறையில் அடைத்தனர். கைது செய்த ரகு மீது ஏற்கனவே அமைந்தகரை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் வாகன சோதனையில் அமைந்தகரை போலீசார் இருவரை கைது செய்து அரும்பாக்கம் போலீசார் இடம் ஒப்படைத்தும்… ரகுவின் கூட்டாளி ராஜேஷ் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் ராஜேஷ் என்பவரை விடுவித்ததாக தகவல்..!!!
நமது நிருபர்
