Sun. Mar 8th, 2026

சென்னை | ஷேர் ஆட்டோ மீது வேன் மோதி 7 பேர் படுகாயம் |

மே, 16-2019…,

அண்ணா நகர் அருகே ஷேர் ஆட்டோ மீது வேன் மோதியதில் 7 பேர் படுகாயம் வேன் ஓட்டுனர் கைது.

அயனாவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று அதிகாலை 4:30 மணி அளவில் ஷேர் ஆட்டோ 7 பேரை ஏற்றி கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தது.

அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் வேகமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு… கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்ற அனுப்பி வைத்தனர். இதில் அயனாவரத்தை சேர்ந்த அரசு (65), ரவி (40), கவியரசு (37), பச்சையம்மாள் (56), திலகவதி, கோகிலா (40) , கலையரசி (54) , சுகுண (54) ஆகிய ஏழு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தினந்தோறும் அயனாவரத்தில் இருந்து ஆட்டோவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அதிவேகமாக ஓட்டி ஆட்டோ மீது மோதிய… வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (38) ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நமது நிருபர்.