Sun. May 4th, 2025

இருசக்கர வாகன | திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது |

சென்னை அயனாவரம் செட்டி தெருவை சேர்ந்த தனுஷ் என்பவர் தனது பல்சர் பைக்கை வீட்டின் அருகே கடந்த 5ஆம் தேதி நிறுத்தி வைத்த வாகனம் மறுநாள் காலை காணவில்லை என்று தனுஷ் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருடப்பட்ட வாகனம் ரெட் ஹில்ஸ் பகுதியில் இருப்பதாக காவல் துறையினர் தகவல் அறிந்து அயனாவரம் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று வாகனம் மற்றும் குற்றவாளிகள் 3-பேரை பிடித்தனர். இதில் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் விக்னேஷ், பொருட்செல்வன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதில் மணி (எ) மணிகண்டன் மீது ஏற்கனவே 2-கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது…

நமது நிருபர்