Sat. Mar 7th, 2026

நடுரோட்டில் வாலிபரை விரட்டி கொலை முயற்சி |அதில் இருவர் கைது |

மே,6-2019…,

அண்ணாநகரில் நடுரோட்டில் வாலிபரை விரட்டி கொலை முயற்சி செய்த இருவர் கைது ஒருவர் தலைமறைவு.

சென்னை பாடி சக்தி நகரை சேர்ந்தவர் பிரவீன் (23). இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர் மாலில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் இரவு பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் பொழுது வி.ஆர் மால் அருகே எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை திருமங்கலம் என்.வி.என் நகரைச் சேர்ந்த சதீஷ் (20) என்பவர்… மோதுவது போல வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் காயமடைந்த சதீஷ் தன்னுடைய நண்பரும் அதே பகுதியை சேர்ந்த அசோக் (21) என்பவருக்கு தொலைப்பேசி மூலமாக அழைத்தார்.

சம்பவ இடத்துக்கு இரு சக்கர வானத்தில் வந்த இருவர் மறைத்து வைத்து இருந்த பட்டாகத்தியை எடுத்துள்ளனர். பட்டாகத்தியை கண்டதும் பயத்தில் பிரவீன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்துள்ளார். கையில் பட்டாகத்தியுடன் மூன்று மர்ம நபர்கள் பிரவீனை நடுரோட்டில் துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றவுடன் அங்கே வந்த மாநகர பேருந்தில் ஏறி தப்பியுள்ளார் பிரவீன். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூவரும் பிரவீனின் இருசக்கர வாகனத்தை கற்களால் அடித்து நொருக்கியுள்ளனர். பயந்து போன பிரிவீன் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமங்கலம் போலீசார் மூன்று நபர்களை துரத்தி சென்றனர்.

ஆனால் மூவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் யுவராஜ் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருமங்கலத்தில் கைது செய்தனர். கைது செய்த சதிஷ், அசோக் இருவரை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்…

நமது நிருபர்