மதுரை அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் எருது கட்டு திருவிழா கோலகலமாக இன்று நடைபெற்றது…
ம
துரை, அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் கலியுகமெய்ய அய்யனார் சுவாமி கோவில் சார்பாக எருது கட்டு திருவிழா கோலகலமாக நடைபெற்றதுஉலக நன்மை வேண்டியும், நல்லமழை பொழிய வேண்டியும் இந்த திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்மேளதாளங்கள் முழங்க கோவில் பூசாரி கோவில் மாடுகளை அவிழ்த்து விட்டார்முதல் காளையாக பொதும்பு கிராம காளை அவிழ்த்து விடப்பட்டதுமொத்தம் 15 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுஏராளமான வீரர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்மாட்டின் கொம்பு, வாலை, பிடிக்க யாருக்கும் அனுமதியில்லைஅவிழ்த்து விடப்பட்ட காளைகள் கூட்டத்திற்குள் புகுந்து வீரர்களை சிதறடித்து பறக்கவிட்டதுகோவில் திருவிழாக்காக நடத்தப்பட்ட இந்த எருது கட்டு திருவிழாவில் யாருக்கும் பரிசுகள் வழங்கவில்லைஆயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…AK@ஆனந்தகுமார்
