Tue. May 6th, 2025

செல்போன்கள் திருடும் | பேப்பர் போடும் பையன் கைது |

சென்னை அண்ணா நகர் பகுதியில் செல்போன் திருடிக் கொண்டு தப்பிய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

அயனாவரம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ்/60, இவர் அண்ணா நகர் 13-பிளாக்கில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை புஷ்பராஜ் பணியில் இருக்கும்போது முதல் மாடிக்கு செல்ல முயன்றபோது அறையில் வைத்திருந்த இவருடைய இரண்டு செல்போன்களை மர்ம நபர் திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இதை கண்டதும் புஷ்பராஜ் திருடன், திருடன் என சத்தம் போட்டு கொண்டு பின்னாலேயே ஓடினார் அந்த வழியாக நடைபயிற்சி மேற் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி அண்ணா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை செய்தபோது டிபி.சத்திரம், 26வது தெருவை சேர்ந்த விஜய்/21, என்பதும் இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் இவர் தினமும் காலையில் வீடுகளுக்கு பேப்பர் போடும் வேலை செய்து வந்துள்ளார் இதைப் பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக அண்ணாநகர் பகுதியில் வாட்ச்மேன் மற்றும் வீடுகளில் உள்ள செல் போன்களை திருடி வந்திருப்பதும் இந்த நிலையில் இன்று அண்ணா நகரில் செல்போன் திருடி கொண்டு ஓடும் போது பொது மக்களிடம் சிக்கி கொண்டதும் தெரியவர கல்லூரி மாணவன் விஜய் என்பவரிடம் இடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்…

நமது நிருபர்