ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் அம்மா பூங்கா மற்றும் அதனுடன் இனைந்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி சந்திரபிரபா நகரகழக செயலாளர் என் பாஸ்கரன் ஒன்றிய கழக செயலாளர் ஆர் எம். குருசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அந்த பகுதியில் வாழும் திருவள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அந்த பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

