Tue. May 6th, 2025

நண்பனை கொன்று உரகிடங்கில் புதைத்த இருவர் |

நண்பனை கொன்று உரகிடங்கில் புதைத்த இருவர் |பரங்கிமலை வாலிபரை கொலை செய்து புதைத்ததால் பரபரப்பு. வாட்ஸ் ஆஃப் பதிவால் சிக்கும் கொலையாளி…

பரங்கிமலை, கலைஞர் நகர் பகுதியில் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்திற்கு சொந்தமான உரக்கிடங்கில் உள்ள முட்புதரில் ஒருவாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக நந்தம்பாக்கம் போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கோவிந்தராஜ், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஆகியோர் சம்பவ இடதிற்கு சென்று, வாலிபர் புதைக்கப்படிருப்பது உண்மைதானா என கிராம அலுவலர் சுரேஷ் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், சடலம் இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பல்லாவரம் தாசில்தார் ஹேமலதா முன்னிலையில் மயான பணியாளர்களைக் கொண்டு சடலம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தில் சறுகுகளால் மூடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்ட மண்வெட்டியை கொத்தியபோது 1அடி ஆழத்திலேயே சடலம் தட்டுப்பட்டதால், மண்வெட்டியால் தோண்டாமல் கைகளாலே சறுகு மற்றும் மணலை விலக்கி சடலத்தை வெளியே கொண்டு வந்து பார்த்தபோது 32 வயது மதிக்கத்தக்க வயதுடைய வாலிபரின் சடலத்தை வெளியே கொண்டு வந்தனர்.

குற்றவாளி ஆனந்த்

அந்த வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டும் கால்களில் இரத்தம் வழிந்தபடியும் காணப்பட்டது. உடனே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் சடலமாக கிடந்தவர், நேற்று முன்தினம் 2 வாலிபர்களுடன் மதுபாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு உரக்கிடங்கிற்குள் செல்வதை பார்த்துள்ளர். இதில் உடன் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சடலமாக கிடந்தவர் பழவந்தாங்கலை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இந்த 3 பேரும் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்றும் அடிக்கடி இந்த உடக்கிடங்கில் குடித்து விட்டு மணிக்கணக்கில் அரட்டை அடித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் நேற்று முன்தினமும் இந்த 3 பேரும் மதுபாட்டில்களுடன் உள்ளே சென்று மது அருந்திய போது ஏற்ப்பட்ட வாக்குவதத்தில் உள்ளூர் பகுதியை சேர்ந்த 2 பேரும் பழவந்தாங்கலை சேர்ந்த வாலிபரை பீர்பாட்டிலை உடைத்தும் செங்கற்கள் மற்றும் கட்டையை கொண்டும் அடித்தும் கொலை செய்து விட்டு, சடலத்தை புதைக்க உபகரணங்கள் இல்லாததால்… மண்ணையும், இலை சறுகாலும் மூடி விட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்றுள்ளனர்.

இதனிடையே நந்தம்பாக்கம், கம்பர் தெருவை சேர்ந்த ஆனந்த்(27) என்பவர் முட்புதர் பகுதி அருகே அடிக்கடி சுற்றி வந்ததாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அவரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது உடனே ஆனந்தை போலீசார் தேடியபோது தப்பி ஒடிவிட்டதாக தகவல் கிடைத்தது மேலும் ஆனந்த் வாட்ஸ் ஆப்பில் தான் ஒரு கொலை செய்து விட்டதாக தனது நண்பர்களுக்கு தகவல் பரப்பியதாலும் போலீசாரின் கவனம் ஆனந்த் என்பவரின் பக்கம் திரும்பியுள்ளது ஆனந்தை பிடித்து விசாரித்தால் மற்றொரு கூட்டாளி யார் என்பதும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு சம்மந்தமாக 5 பேரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது…

நமது நிருபர்