Fri. Jul 24th, 2026

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை | கைது செய்த அரும்பாக்கம் போலீசார் |

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை | கைது செய்த அரும்பாக்கம் போலீசார் |

சென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு ரவுடிகள் கைது…

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முன்னாள் ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் அரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த வாரம் நான்கு நபர்களை அரும்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த மேலும் இருவர் கைது ஒருவர் NSK நகரை சேர்ந்த ரவுடி கார்த்தி /26, மற்றும் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ரவுடி நவராஜ்/24 ஆகியோரை அரும்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவர் மீதும் அமைந்தகரை, மற்றும் அரும்பாக்கம் உட்பட பல காவல் நிலையங்களில் 3-கொலை வழக்கும் 2-கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்