பழிவாங்கிய சிறுவர்கள் | இருவர் சேர்ந்து, ஒருவரை கொலை செய்தனர் |
சிறாரை கொலை செய்த கூட்டாளிகளை காவல்துறையினரின் CRIME INTELLIGENCE வாட்ஸ் அப் குழு உதவியுடன் 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டனர்..
கடந்த 24 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தலையில் வெட்டு காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் பழனி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
பல்வேறு முயற்சியில் இந்த கொலை வழக்கு தமிழக காவலர்களுக் கென்று
CRIME INTELLIGENCE என்ற தகவல் பறிமாற்ற வாட்ஸ் அப் குழுவில் இந்த சடலத்தின் புகைபடங்களை ஆய்வாளர் பகிர்ந்து கொலை செய்யப்பட்டவரை பற்றிய விவரத்தை கேட்டறிய அக்குழுவில் திண்டிவனத்தை சேர்ந்த தலைமை காவலர் தீபன் என்பவர் பழைய சிறார் குற்றவாளிகளின் படங்களுடன் கொலை செய்யப்பட்ட நபரின் புகைபடத்தை துள்ளியமாக ஒப்பிட்டு, இறந்தது சில வழக்குகளில் தொடர்புடைய சிறார் குற்றவாளி கார்த்திகேயன்/17 (எ) திருட்டு கார்த்திகேயன் என்பதை உறுதி செய்தார்..
இது தொடர்பாக இந்த கொலையில் தொடர்புடைய 2 குற்றவாளிகளான சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்/17 மற்றும் சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த யுவராஜ்/17 ஆகியவர்களை வெவ்வேறு இடங்களில் தனித்தனியே கைது செய்தனர்.
மேலும் கார்த்திகேயனின்
முழு விவரங்களையும் போலீசார் சேகரித்ததில் கொலைக்கான காரணம் அதாவது 6 மாதத்திற்கு முன் இளம் குற்றவாளியான கார்த்திகேயன் மற்றும் அவனுடைய 4 கூட்டாளிகளை ஒரு வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த கார்த்திகேயன் மற்றும் அவனுடைய 4 கூட்டாளிகளில் இருவர் மட்டும் கார்த்திகேயனால்
தான் தாங்கள் சிக்கி கைதானதாக எண்ணி கொண்டு கார்த்திகேயனை பழி வாங்கும் எண்ணதோடு அவனை கொலை செய்ய திட்டமிட்டு இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கார்த்திகேயனுக்கு தன்னை கொலை செய்யப்போவதாக விஷயம் தெரிய வர, இவ்விருவரையும் தனது வேறு கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவர்கள் தலையில் பீர் பாட்டிலால் அடித்து எச்சரித்து அனுப்பியுள்ளான்.
அதனால் கோபத்தில் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்
சந்தர்பத்திற்காக காத்து வந்த இருவரும் கடந்த 24ம் தேதி அன்று கார்த்திகேயனை தனியாக திருட்டு வேலைக்கு போக வேண்டும் என அழைத்து வந்து கஞ்சா கொடுத்து போதையில் மயக்கி கார்த்திகேயனை கத்தியால் தலையில் வெட்டியும் இரும்பு ராடால் முகத்தில் அடித்து அடையாளம் தெரியாதவாறு கொலை செய்துவிட்டு தலைமறைவாகியாதாக இரண்டு குற்றவாளிகளும் ஒப்புகொண்டனர்.
இக்கொலை வழக்கில் துப்பு துலங்க உதவியாக இருந்த ( CRIME INTELLIGENCE ) என்ற வாட்ஸ் அப் குழுவையும் உதவிய சில உறுப்பினர்களையும் காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி வெகுவாக பாராட்டினார்.
நிருபர் – ராம்
