Sat. Mar 7th, 2026

கோயம்பேடு மார்கெட் | நள்ளிரவில் வழிப்பறி செய்யும் வாலிபர் கைது |

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியை காட்டி இரவு நேரங்களில் வியாபாரியிடம் பல நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்க்கும் கூலித்தொழிலாளி முருகன் வயது 48.

நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் மார்க்கெட்டில் தூங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளி முருகனை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து ஒரு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த 300 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு போலீசிடம் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு தப்பி சென்றான்.

இது குறித்து முருகன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் மாதேஷ்வரன் தலைமையில் குழு கோயம்பேடு மார்க்கெட்டில் தேடும் போது அந்த வழியாக வந்த வாலிபர் போலீசை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார்.

கோயம்பேடு போலீசார் துரத்தி சென்று வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

பின்பு விசாரணை செய்ததில் கோயம்பேடு சேர்ந்த சரண் வயது 21 கோயம்பேடு மார்க்கெட்டில் பல நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கைது செய்த சரண் மீது ஏற்கனவே 4 வழிப்பறி வழக்குகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் நிலவியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….