Sat. Mar 7th, 2026

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி மனைவி பலி | கணவன் மகளுக்கு சிகிச்சை |

அரசு பஸ் மோதி | மனைவி பலி கணவன் மகளுக்கு சிகிச்சை |

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகத்தில் கணவன் மனைவி மகள் என மூன்று பேர் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி பலி. கணவருக்கு வலது கை எலும்பு முறிவு. மகளுக்கு வலது கை காலில் லேசான அடி. அரசு பஸ் ஒட்டுனர் கைது.

சென்னை அரும்பாக்கம் சேர்ந்த ஜாபர் அலி வயது 35 இவரது மனைவி பர்சானா வயது 26 நான்காம் வகுப்பு தனிஷா வயது 6 ஆகியோர் நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலை வேம்புலி அம்மன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த ஆரணிக்கு செல்லும் அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது.

இதில் பர்சானா தலையில் அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். ஜாபர் அலிக்கு வலது கையில் எலும்பு முறிந்தது. மகள் தனிஷா என்பவருக்கு வலது கை காலில் லேசான அடிப்பட்டது.

இதனால் அரசு பேருந்து ஒட்டி வந்த ஒட்டுனர் திருவண்ணாமலை சேர்ந்த காந்தி வயது 37 என்பவர் கைது.

வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.