Sat. Mar 7th, 2026

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம் |

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

சென்னை வடபழனி அருகே அதே பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அம்பிகா எம்போரியம் சாலையை கடந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே வழியில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக சூர்யா, அஜித் ஆகியோர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அஜித் என்பவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் குடி போதையில் இருந்தாக தெரிவந்துள்ளது. மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவி வருகிறது.