Mon. Jun 8th, 2026

மூளையில் இரத்தக் கசிவு | காவல் ஆய்வாளர் திடீர் மரணம் |

மூளையில் இரத்தக் கசிவு | காவல் ஆய்வாளர் திடீர் மரணம் |

உடல்நலக் குறைவின் காரணமாக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐ.சி.எப் காவல் நிலைய ஆய்வாளர் ராமையா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேர்தல் பணி இடமாற்றம் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து கடந்த மூன்றாம் தேதி ஐ.சி.எப் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று காவல் ஆய்வாளராக வந்தவர் ராமையா.சென்னை கீழ்ப்பாக்கம் உதவி ஆய்வாளர் காவலர் குடியிருப்பில் தன்னுடைய மனைவி சரஸ்வதி மகன்
சதிர் வயது (18) ஆகியோரிடம் வசித்து வந்தார். சதிர் சென்னை வைஷ்ணவி கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.

கடந்த எட்டாம் தேதி அன்று பணியில் இருந்த ஆய்வாளர் ராமையாவுக்கு தீடீர் என்று இரவில் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த உதவி கமிஷ்னர் பாலமுருகன் ஆய்வாளர் வீட்டிற்கு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆய்வாளர் தீடீர் என்று மறுநாள் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ராமையாவை மருத்துவம் செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதனால் நாடித்துடிப்பு குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் நேற்று இரவு ராமையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.