Sat. Mar 7th, 2026

போலி போலீசுக்கும் உண்மை போலீசுக்கும் தொடர்பு?? ||

ஐ.சி.எப் பகுதியில் பணம் பறிக்கும் கும்பலுக்கும் ஆய்வாளருக்கும் தொடர்பு..??

காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் அதிர்ச்சி. டிப்டாப் ஆசாமி போலீஸ் போல் நடித்து பத்திரிகையாளரிடம் பணம் பறிப்பு புகாரை வாங்காமல் போலீசார் விசாரித்த நிலையில் மீண்டும் போலி போலீஸ் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை ஐ.சி.எப் பகுதியைச் சேர்ந்தவர், சேகர் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3ம் தேதி சென்னை கேரேஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ATM மில் பணத்தை எடுத்துவிட்டு சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட அயனாவரத்தை சேர்ந்த தமிழரசன் வயது 35 டிப்டாப் ஆசாமி சேகரை வழிமறித்து தன்னை போலீஸ் என, அறிமுகப்படுத்திக் கொணடு விசாரணை நடத்தியது போல் நடித்து
காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையேழுத்து போட்டு விட்டு போ என, சேகரை மிரட்டி அழைத்துள்ளார். அதில் பயந்து போன சேகர் இதை உண்மை என, நம்பி அவருடன் சென்றுள்ளார். பின் லோகோ ரயில் நிலையம் அருகே சென்ற போது, சேகரை தமிழரசன் மிரட்டி 3000- ரூபாயை பறித்து தப்பியுள்ளார்.

இதுகுறித்து சேகர் ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் குற்றப்பிரிவு ஆய்வாளர் காமேஷ்வரி இந்தப் புகாரை வாங்காமல், ஒரு வார காலத்திற்கு தமிழரசனை பிடித்து, பணத்தை மீட்பதாக சேகரிடம் கட்ட பஞ்சாயத்து செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அதே நபர் கேரஜ் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்த சேகர் ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஐ.சி.எப் போலீஸ் அந்த இடத்திற்கு வராததால் தமிழரசன் தப்பினான். பின் சிறிது நேரத்தில் அதே பகுதியில் சேகரை பின்தொடர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் போலீசிடம் சொன்னதால், நாங்கள் பயந்துடுவோமா போலீஸ் நாங்கள் சொல்லுவதை கேட்கும் என்று சொல்லி சேகரை மிரட்டியுள்ளனர். அதில் பயந்து போன சேகர் நேற்று மறுபடியும் புகார் கூறிள்ளார்.

இந்நிலையில், போலி போலீஸ் நடமாட்டமும், அவர்கள் மிரட்டல் விடுப்பதும் போலீசாரின் மெத்தன போக்கையே காட்டுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பணம் பறிக்கும் கும்பல் யார் என்று ஆய்வாளருக்கு தெரிந்தும் அந்த கும்பலை இதுவரை பிடிக்க வில்லை. இதன் அடிப்படையில் பணம் பறிக்கும் கும்பலுக்கும் ஆய்வாளருக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் 44 லட்சம் மோசடி வழக்கில் பணியிட நீக்கும் செய்யப்பட்ட பெண் காவலருக்கு ஆய்வாளர் ஆதரவு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது….

முன்பு ஒரு முறை தமிழரசன் ஒரு குற்ற வழக்கில் மூன்று மாதங்கள் சிறையில் இருந்து வந்தவர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…

குறிப்பு :- இதுசம்பந்தமாக காவல் ஆய்வாளர் அவர்கள் எந்தவித விளக்கங்கள் அளித்தாலும் வெளியிடுவோம்…

நமது சிறப்பு நிருபர்