பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | சென்னை மற்றும் ஈரோடு பகுதியில்…
பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | சென்னை மற்றும் ஈரோடு பகுதியில்…
சென்னை திருவேற்காடு கூட்டுறவு வீட்டுவசதிக் குடியிருப்பில் வசித்து வரும் சந்தானமுத்து – ஜெயலட்சுதி தம்பதியினரின் மகன் சித்தார்த்தன், மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சந்தானமுத்துக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க சித்தார்த்தின் தாய் ஜெயலட்சுமி மற்றும் தாத்தா, பாட்டி ஆகிய அனைவரும் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டிற்கு வந்த சித்தார்த்தன், வீட்டின் கதவு உடைத்து பீரோவில் வைத்திருந்த 170 சவரன் தங்க நகை, வெள்ளி மற்றும் வைர நகைகள், 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாமரைப்பாளையம் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகர். இவரது மனைவி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இருவரும் சென்னிமலைக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய நிலையில், வீட்டின் கதவு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த 20 சவரன் நகை கொள்ளை போனதை கண்டு வேதனை அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
செய்தி – நமது நிருபர்

