Sat. Mar 7th, 2026

மது பழக்கத்தை விட முடியாத ஜவுளி வியாபாரி | தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதி |

மது பழக்கத்தை விட முடியாத ஜவுளி வியாபாரி | தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதி |

ஈரோடு மாவட்டம் பழையபாளையம் பகுதி அம்பி்கை நகரை சேர்ந்த முரளிதரன்/56 இவர் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் வாரச் சந்தைகளில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் தினேஷ்வரன் தீனதயாளன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது மது பழக்கமானது நாளடைவில் அதிகரித்து முழுமையான மது பழக்கத்திற்கு அடிமையானார்.

மதுப்பழக்கத்தை கைவிட முடியாத முரளிதரன் பல முயற்சிகள் மேற்கொண்டும் அவரால் மது பழக்கத்தை விட முடியவில்லை.

இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தனது குலதெய்வ கோவிலான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பாக வந்த முரளிதரன், சாமி கும்பிட்டுவிட்டு மது பழக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாததால், கோயிலில் இருந்து திடீரென வெளியே வந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி, தன்னை தானே தீ வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் முரளிதரனை சாக்குப் பைகளை கொண்டு தீயை அணைத்து அவரை காப்பாற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

70% சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முரளிதரன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து சூரம்பட்டி காவல் துறையினர் கோயில் நிர்வாகிகளிடமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமும் விசாரணை செய்ததில் சிசிடிவி காட்சியில் முரளிதரனுடன் வந்த ஒருவரை தேடிவருகின்றனர்…

நிருபர் சண்முகசுந்தரம்