Sat. Mar 7th, 2026

ரயிலில் தொடர்ந்து திருடுவதற்காகவே| பயணம் செய்யும் திருட்டு பயணி|

ரயிலில் தொடர்ந்து திருடுவதற்காகவே | பயணம் செய்யும் திருட்டு பயணி |

சென்னை சென்டரல் ரயல் நிலையத்தில் குளிர் சாதன ரயில் பெட்டிகள் வெளியூரிலிருந்து சென்னை சென்டரல் நோக்கி வந்தடையும் ரயில்களில் குறிப்பாக ஏ.சி கோச்சில் பயணித்து வருபர்களின் நகை பணம் பொருள்கள் செல்ஃபோன் போன்றவை காணாமல் போவதாக தொடர் புகார் வந்த நிலையில்

தொடர் திருட்டை கண்டுபிடிக்க ரயில்வே காவல் ஆய்வாளர் கயல்விழி விசாரணை தொடங்கியதில் சென்டரல் ரயில் நிலையத்தில் இன்று ஈரோடு மாவட்டம் கணபதி பாளையத்தை சேர்ந்த பாலாஜி (23) என்பவர் சந்தேகப்படும்படி நடைமேடை 5ல் நின்றுகொண்டு போது அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் குளிர்சாதன கோச்சில் சக பயணிபோல் பயணம் செய்வதே விலை உயர்ந்த செல்ஃபோன் போன்ற பொருட்கள், நகைகள், பணம் ஆகியவை திருடுவது தனது வாடிக்கையான வேலை என்பதை ஒப்புகொண்டார்.

திருடுவதற்காகவே செலவு செய்து பயணிக்கும் சக பயணி இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும் அதிலும் ஜாலியாக திருடிய பணத்தை வைத்து செலவு செய்துள்ளார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட பாலாஜியை ரயில்வே காவல் ஆய்வாளர் கயல்விழி கைது செய்து பாலாஜியிடம் இருந்து விலை உயர்ந்த 11 செல்ஃபோன்களும்,
10-சவரன் தங்க நகைகளும் மொத்தம் 3,லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைபற்றப்பட்டது என தகவல்…

நிருபர்
வெ.ராம்