விருகம்பாக்கத்தில் 3.5,லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்|

விருகம்பாக்கத்தில் 3.5-லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் |
விருகம்பாக்கம் ஆரோக்யா நகர் இளங்கோவன் தெருவில் மொத்த வியாபாரி கடையில் குட்கா விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் சிவகுமார் விற்பனை செய்யும் கடைக்கு சென்று சோதனையிட்டபோது 25-மூட்டைகளில் 500-கிலோ எடை கொண்ட சுமார் 3.5- லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
இதில் கடையில் பிடிப்பட்ட முகமது அப்துல்லா என்பவர் மீது சட்டவிரோதமாக தடை செய்யபட்ட குட்காவை விற்பனை செய்வதற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் தமீம் அன்சாரீ என்ற மற்றொரு குற்றவாளி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்…
நிருபர்
வெ.ராம்
