Sat. Mar 7th, 2026

போலீஸ் மகன் திருடன் என்ற பழமொழியை | உண்மையாக்கிய போலீஸ் மகன்|

போலீஸ் மகன் திருடன் என்ற பழமொழியை உண்மையாக்கிய போலீஸ் மகன்

தமிழில் ஒரு பழமொழி உண்டு.. வாத்தியார் மகன் மக்கு,. போலீஸ் காரன் மகன் திருடன் என்று… அந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் இந்த செய்தியை பார்த்தால், அதில் பாதி உண்மை என்று தான் தோன்றுகிறது.
திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் தலைமை பெண் காவலர் அந்தோணி மேரி. அவரது மகன் தினகரன். கணவர் செல்வராஜ் (போலீஸ்) இறந்த பின் தாயின் வளர்ப்பில் வளர்ந்து வரும் தினகரன் மீது சிறு வயதிலேயே நான்கு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது…அதாவது தினகரன் மீது திருச்சியை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் ஏற்கனவே நான்கு வழக்கு உள்ளது ஆடு திருடி ஊர் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட தினகரனை விடுவிக்க அவரது தாயார் தனது குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் ச.ம.உ ஒருவர் உதவியுடன் மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து வழக்கு பதிவு செய்யாமல் காவலர்களால் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபடவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது…மேலும் தற்போது முசிறி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த காவலர்களிடம் இருசக்கர வாகனத்துடன் PULSAR 200CC சிக்கிய தினகரனை. காவலர்கள் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். ஆனால் அப்போது அந்த வண்டியில் சரியான ஆவணம் இல்லாததால் தனது அம்மா, அப்பா இருவரும் காவலர்கள் என கூறி தப்பிக்க முயலும் பொழுது… முழுமையாக விசாரித்ததில் அந்த இரு சக்கர வாகனம் ஏற்கனவே திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் திருடு போய்விட்டதாக வழக்கு பதிவாகி இருந்ததும்…அதனை தினகரன் திருடி விற்க வந்ததும் தெரியவந்தது.
ஆனால் திருட்டு வாகனம் விற்பனையில் சிக்கிய தினகரனை அவரது அம்மா அந்தோணி மேரி தனது மேல் அதிகாரிகளிடம் பேசி தினகரனுடன் சேர்ந்தவர்களையும் விடுவிக்க வைத்து உள்ளார்…மேலும் தலைமை பெண் காவலர் மகன் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மேலதிகாரியின் தலையீட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து திருச்சி தில்லை நகரில் உள்ள பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காவலர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு தொடராமல் விடுவிக்கப்படுவதும் சாமானிய மக்கள் குற்றம் செய்யும் பொழுது அவர்கள் மீது கடுமையான சட்டத்தை காவலர்கள் காட்டுவதும் அதிகரித்துக் கொண்டே வருவதாக காவலர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்…அதனால் தலைமை பெண் காவலர் அந்தோணி மேரி மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல்‌ அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்க்கொண்டு இவருடன் சம்மந்தப்பட்ட பல குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கருத்து நடவடிக்கை எடுப்பார்களா திருச்சி மாவட்டம் காவல்துறை அதிகாரிகள்…?

நமது நிருபர்..