Thu. May 8th, 2025

6 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி இடமாற்றம் !

6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் அதிரடி இடமாற்றம்!

தேர்தல் என்றாலே ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றங்கள் உண்டு தேர்தலையொட்டி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தேர்தல் விதிகளின் ஒன்றான கடைபிடிக்கப்படும் மரபு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் சமீபமாக பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர் அதே வரிசையில் தற்போது 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் 1 காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் மொத்தம் மாற்றப்பட்டுள்ளனர்.

1) எம்.எஸ். ஜாபர்சேட் – தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

  1. அம்ரேஷ் புஜாரி – சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
  2. சு.அருணாச்சலம் – சென்னை போலீஸ் போக்குவரத்துக்கழக சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
  3. எஜிலியர்சேன் – உத்தரப் பிரதேசத்திலிருந்து தமிழகம் அயல் பணியில் வந்துள்ள எஜிலியர்சேன் தற்போது சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்

5.சோனல் சந்திரா – உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

  1. வருண் குமார் – தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
  2. பழனிகுமார் – தேனி மாவட்ட காவல் தலைமையிடக் கூடுதல் எஸ்.பி தற்போது எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை செயலாக்கப் பிரிவு டிஜிபி ஆஷிஷ் பெங்க்ரா வுக்கு தமிழ்நாடு மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபி பணியைக் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.