Sat. Mar 7th, 2026

அடிச்சி விரட்டினாலும் | எட்டி உதைத்தாலும் | லஞ்சம் வாங்குவேன்

மின் வாரியத்தில் ஊழல்; பல லட்சங்கள் மோசடி

புதுகோட்டையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் குப்பு என்பவர் மின் பொறியாளராக பணியேற்றதிலிருந்து மின்சார வாரியம் தரிகெட்டுவிட்டது. 1990 லேயே மின் கம்பம் உடைந்தற்கு ரூ.2000/- த்தை லஞ்சமாக வாங்க ஆரம்பித்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 1993 இல் விவசாயிகளுக்கு முறையற்ற மின் இணைப்பை வழங்கி அதில் முறைகேடு செய்துள்ளார் அதில் வல்லவராகவும் திகழ்ந்துள்ளார். அதன் பின்னர் முறையாக விவசாயத்திற்கு பதிவு செய்து வைத்திருந்து கிடைக்காத விவசாயிககளும் பொது மக்களும் ஒன்று திரண்டு குப்புவை கந்தர்வகோட்டையிலிருந்து விரட்ட அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. 

பின்னர் 2001 இல் சிருகனூர் திருச்சிக்கு குப்புவை மாற்றம் செய்த பிறகு அங்கும் ஊழலை தொடர அதை கேள்வி கேட்ட செயற்பொறியாளர் ஸ்ரீரங்கம் என்பவரை செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்வத்தின் விளைவாக துவாக்குடி துணைமின் நிலையத்திற்க்கு மாற்றுதலாகி தூக்கிவீசப்பட்டார்.

அங்கிருந்துகொண்டு தனது ஜாதி ரீதி மூலம் முயற்சிகள் மேற்கொண்டு JE ஆக இகா கீரணூர்க்கு பதவி உயர்ந்தார். தொடர் மோசடிகளுக்குள்ளாகி பணியிட மாறுதலாகியும் திருந்தாத குப்பு மீண்டும் 2006 இல் பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று முறையற்ற மின் இணைப்புக்களை வாரி வழங்கினார்.

இதனை கண்டிக்க முயன்ற உயரதிகாரியையே மிரட்டியும் அடிக்கவும் முற்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து குப்பு மீது நடவடிக்கை எடுத்தார்கள். இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மீண்டும் விவசாயிகளிடம் வயிற்றில் அடித்து லஞ்த்தை பெற்றுகொண்டு முறைகேடு செய்து கொண்டே வந்ததில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தி குப்புவின் தெற்கு கீரணூர் அலுவலகத்தை பூட்டு பூட்டினர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி குப்புவை வேறு இடத்திற்க்கு பணியிடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தனர். விழுப்புபணி விசாரணையில் நிறுவனம் செய்த 100 பக்க அறிக்கைகளின் மூலம் பின்னர் குப்பு செய்த ஊழல் முறைகேடுகளையும் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய அப்போதைய வாரிய இழப்பீடு மட்டும் ரூ. 25 லட்சமாகும்.

இதோ போன்று பல இடங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது மக்கள் தொடர்பே இல்லாத துணை மின் நிலையமான ஆதனக்கோட்டைக்கு மாறுதல் உத்தரவு பிறப்பித்தனர்.

அங்கு இடமாறியும் திருந்தவில்லை பொதுமக்கள்  தொடர்பு இல்லாததால் மக்களுக்கு பதில் அந்த அலுவலகத்தில் பணி செய்யும் அலுவலர்களை மிரட்டி பல பொய்யான பெட்டிசனை போட்டும் PCR வழங்கி விடுவேன் என மிரட்டியும் பணத்தை பிடுங்கி வந்துள்ளார். அதனை தட்டி கேட்ட சிலபொறியாளர்கள் மீது பல்வேறு பொய்யான புகார்களாக பெட்டிசனை அள்ளி இரைத்தார்.

இந்த செயல்கள் அனைத்தும் தற்போது விழிப்பணி மூலம் நிறுவனம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் வாரிய தலைவரே குப்புவின் கருணை மனுவை நிராகரித்த நிலையில் முன்னால் இயக்குநர் அண்ணாதுரை மற்றும் முருகன் அவர்களின் முயற்சியில் தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு சென்று வாரியத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட அனைத்து மனுக்களும் ஆணைய பரிந்துறையை நீதிமன்ற உத்தரவுப்போல் கருதி அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து லட்சக்கணக்கான பணப்பயன்களை வழங்கியது முறைகேடானது. அவற்றில் குப்புவின் AE பதவி உயர்வும் அடங்கும்.

அனைத்து பணியாளர்களும் இதேபோல் செயல்பட்டால் வாரியம் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து பணப்பயன்களை அளிக்குமா? என்று பணியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உள்ள தனிப்பட்ட (Personal) ஆவணங்களை குப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விண்ணப்பத்தை விதிமுறைப்படி நிராகரிக்காமல் அதற்கு ஒரு தொகையை பெற்றுக்கொண்டு செயற்பொறியாளர் பொது (புதுக்கோட்டை) திருமாவளவன்  என்பவர் எடுத்து வழங்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஆவணங்களை கொடுக்க வேண்டாம் என்று திருமாவளவனிடம் விண்ணப்ப கடிதம் வழங்கியும் அதனை பொருட்படுத்தாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளார். இது தொடர்பாக விழிப்புபணி மேற்கொண்டு விசாரணையில் நிறுபனமானதும் தெரியவருகிறது.. திருமாளவன் என்பவரை நிர்வாகம் இடமாற்றம் செய்யாமல் இருப்பதால் அதே அலுவலகத்தில் பயணிக்கும் குப்பு போன்ற திருட்டு பொறியாளர்களுக்கு சாதமாக அமைந்துவிடுகிறது.

கடந்த 25 ஆண்டு காலமாக குப்பு மற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது காழ்புணர்ச்சியில் போடப்பட்ட பெட்டிசன் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நகல்களை முறையாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டிருந்ந்த அதனை வழங்காமல் செயற்பொறியார் திருமாவளவன் என்பவர்  மறுத்துள்ளார். மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தும் அதை வழங்கவிடாமல் மேற்பார்வைபொறியாளர் (புதுக்கோட்டை) அவர்களை மிரட்டும் வகையில் குப்புவின் கடிதம் வழங்கி ஆவணங்களை வழங்கவிடாமல் செய்துள்ளார்.

இதுபோன்று அனைத்து பணியாளர்களையும் மேல் அதிகாரிகளையும் மிரட்டியே இத்தனை காலங்கள் வாரிய பணியை செய்யாமல் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்து வரும் குப்பு என்பவரை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நிரந்தர பணிநீக்கம் செய்யாமல் இருப்பது வாரிய தலைவர் முதல் அனைத்து அதிகாரிகளையும் இவருக்கு கூட்டாக பணம் பெருகிறார்களோ என்பதும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

தவறுமேல் தவறு செய்து அதிகார துஷ்ப்ரோயோகம் செய்து வரும் குப்புவிற்க்கு பதவி உயர்வும் லட்சகணக்கில் பணபயன்களும் வழங்கி வருவது நியாயமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மன உளைச்சலும் பாதிப்பும் ஏற்படுகிறது. மற்ற பணியாளர்கள் இதனால் வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இது போன்ற ஊழல் பணியாளர்களை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே மின் வாரியம் சீராகம் என்பது பலரின் வேண்டுகோள்.